Monday, June 27, 2011

ஞாபகக் கீற்றுகள்

காலைத் தென்றலில்
பனித்துளியின் குளிர்ச்சியில் - உன்
ஞாபகக் கீற்றுகள் மென்மையாய்
என்னைச் சுற்றுகின்றன....
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRGyc7QT2m9sahhR5KZYPgHNwNfnhq8B4yzVegd1PjUk5_kf9l3
வாழ்க்கையின் தத்துவம் அவரவர்
வசதிக்கேற்ப மாறுகிறது!
உயிரை உரித்தெடுக்கும்
உன் ஞாபகப் போராட்டத்தில் - என்
உள்ளமும் உலர்ந்துதான் போகிறது!


சடுதியில் நீ உதிர்த்துச் செல்லும்
உன் உஷ்ணமிகு வார்த்தைகளை விட
உன் பேரமைதி கொடுமையானது!
உன் சொற்களின் கனத்தில் - இங்கு
எல்லாமே சுரமிழந்து கிடக்கின்றன!

எப்போதும் திறந்த விழிகளுக்குள்
வந்து போகும்
உன் பாராமுகத்தில் மௌனமாய்
என் முகம் தாழ்ந்து தவிக்கும்!
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR2RsqmxQturIBlZySw-Wi2pjsBGZFhf_h_5Y8cwjt39eRhPceBPg
இலவசத்தின் உச்சத்தில்
எம் நாட்டு தலைவர்களுக்கு
நீயும் சளைத்தவனல்லடா....
உன்னால் விநியோகிக்கப்படும்
இலவச காயங்களில் - என்
இதயம் எப்போதும்
ஆறாத ரணங்களுடன்
ரிதமிசைக்கின்றன!


என்னிலிருந்து
விலகிச் செல்லும் உன்
ஊடலின் வேகம்
சில நேரங்களில்
மதம் பிடித்த யானையையும்
பின்னுக்குத் தள்ளுகிறது!

http://nitharsanam.net/wp-content/uploads/2007/04/IND.ele.jpg
என் ஒவ்வொரு காயத்தின்
ரகசியத்தின் ஜீவிதத்தில்
ஜீவனாய் நீ மட்டுமே!
என் காதலின் தாகத்தில்
துயரமே தூர்வார்க்கப் படுகின்றன!

ஆயினும்
உன்னால் நிரப்பப்படும்
என் விழிகளின் நீரினிலும்
உனக்கான காதல் நிறைந்திருக்கும்
உன் துதி பாடியே வழிந்திருக்கும்!

3 comments:

விஜய் said...

"ரிதமிசைக்கின்றன"

WOW

Beautiful

Wishes

Vijay

ஷர்புதீன் said...

கவிதை மட்டும்தான் எழுதுவீங்களா ?

பிரேமி said...

நன்றி....விஜய்:-) ஷர்புதீன்! கவிதைக்கு மட்டுமே இந்த தளம் அமைத்திருக்கின்றேன்..அதுதானே தெரியுது! :-) கவியுடன் இணைந்திருங்கள்....நன்றிகள் பல..:-)