காதலின் ஊடலில்
செந்தனலாய் வார்த்தைகளை
நீ
வீசினாலும்
பொறுமையின் பாரத்தை
சுமத்தியதும் நீயல்லவா....
நீ
பயணிக்கும்போது
கடந்து செல்லும்
ஒற்றை மரத்தின்
நிழல்ல நான்...
உன்
பாதச் சுவடுகளின்
வழியே தொடரும்
உனக்கான ஈர நிழல் .....

என் நிலைப்பாட்டை
நீ
அறிகிறாயோ இல்லையோ
உன்
காலம் அறியும்!
விதி முடியும் முன்பு
மலரத் துடிக்கும்
என் கனவினை அள்ளி
உன் காலடியில் விரிக்கின்றேன்..

தூசு படிந்த இலையாய்
என்னுள் படிந்த
உன் நினைவுகளை
துடைத்து எடுக்க துணிந்ததில்லை....
சுகத்தோடு வாழ்ந்த எனக்கு
இன்று
என் அகத்திற்கும் ஆபத்தாம்...
மன பாரம் ஏறி ஏறி
உடல் பாரம் குறைந்து விட்டது..
உன்னிடம் உரையாடமல் இருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் உணர்வுகளும் மெல்லமாய்
சாகடிக்கப் படுகின்றன...

உறவைக் கொடுத்து
உயிரைப் பறிக்கும் வார்த்தைகளை
நீ கற்ற இடம்தான் எது...?
பகட்டாய் வாழ்ந்திருந்தவள்
இப்போது
பயணத்தின் வழியே பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவராய் நிற்கின்றேன் - உன்
நேசத்தின் மாறுதலுக்கப்புறம்...

2 comments:
finally you too come and joined in TAMILMANAM
:-)
wishes!
எனக்கு அது தெரியாதே...:-(
Post a Comment