Wednesday, June 29, 2011

என்றும் உன்னவள்......

http://image.blingee.com/images18/content/output/000/000/000/73f/719939626_1508496.gif?4


விழிகளில் உற்சவம் நடத்தி விளையாடியவள்
விழிமுழுவதும் கடலாய் கோர்த்திருந்தேன்...
வார்த்தைகளற்ற வாக்கியங்களுடன்
மௌனம் மட்டுமே மொழியாக வியர்த்திருந்தேன்...

பகல் இரவு இல்லாத வாழ்க்கையை
உன்னுடன் பகிர்ந்து வாழ காத்திருந்தேன்...
இதயக் கூட்டிற்குள் உன்னை மட்டும்
இமயமாய் வைத்துப் பார்த்திருந்தேன்...

நினைவிழந்த நிலையிலும் _ என்
நிதானம் தவறாமல் உன்னை சரணடைந்தேன்...
காலங்கள் யாவும் உன் மடி தேடி
காதலாய் என் கண்ணியம் காத்திருந்தேன்...

தூணிலும் துரும்பிலும் இறைவனாம்!!!
உணர்வற்ற இடங்களில் அவன் மட்டுமே...என்
ஊணிலும் உயிரிலும் நீதானடா!!!
உணர்வும் உலகமும் நீ ஒருவன் மட்டுமே...

Monday, June 27, 2011

ஞாபகக் கீற்றுகள்

காலைத் தென்றலில்
பனித்துளியின் குளிர்ச்சியில் - உன்
ஞாபகக் கீற்றுகள் மென்மையாய்
என்னைச் சுற்றுகின்றன....
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRGyc7QT2m9sahhR5KZYPgHNwNfnhq8B4yzVegd1PjUk5_kf9l3
வாழ்க்கையின் தத்துவம் அவரவர்
வசதிக்கேற்ப மாறுகிறது!
உயிரை உரித்தெடுக்கும்
உன் ஞாபகப் போராட்டத்தில் - என்
உள்ளமும் உலர்ந்துதான் போகிறது!


சடுதியில் நீ உதிர்த்துச் செல்லும்
உன் உஷ்ணமிகு வார்த்தைகளை விட
உன் பேரமைதி கொடுமையானது!
உன் சொற்களின் கனத்தில் - இங்கு
எல்லாமே சுரமிழந்து கிடக்கின்றன!

எப்போதும் திறந்த விழிகளுக்குள்
வந்து போகும்
உன் பாராமுகத்தில் மௌனமாய்
என் முகம் தாழ்ந்து தவிக்கும்!
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR2RsqmxQturIBlZySw-Wi2pjsBGZFhf_h_5Y8cwjt39eRhPceBPg
இலவசத்தின் உச்சத்தில்
எம் நாட்டு தலைவர்களுக்கு
நீயும் சளைத்தவனல்லடா....
உன்னால் விநியோகிக்கப்படும்
இலவச காயங்களில் - என்
இதயம் எப்போதும்
ஆறாத ரணங்களுடன்
ரிதமிசைக்கின்றன!


என்னிலிருந்து
விலகிச் செல்லும் உன்
ஊடலின் வேகம்
சில நேரங்களில்
மதம் பிடித்த யானையையும்
பின்னுக்குத் தள்ளுகிறது!

http://nitharsanam.net/wp-content/uploads/2007/04/IND.ele.jpg
என் ஒவ்வொரு காயத்தின்
ரகசியத்தின் ஜீவிதத்தில்
ஜீவனாய் நீ மட்டுமே!
என் காதலின் தாகத்தில்
துயரமே தூர்வார்க்கப் படுகின்றன!

ஆயினும்
உன்னால் நிரப்பப்படும்
என் விழிகளின் நீரினிலும்
உனக்கான காதல் நிறைந்திருக்கும்
உன் துதி பாடியே வழிந்திருக்கும்!

Tuesday, June 21, 2011

நீயும் வள்ளல்தானே...!

ஊர் உறங்கிய பின்னும்
உலா வரும் நிலவாக
உறங்காமல் உலா வருகின்றேன்
உன் உயர்ந்த நினைவுகளுடன்!

http://ts2.mm.bing.net/images/thumbnail.aspx?q=1030077352725&id=d80a75ca8104afd2bb2af57107bbed34
என் கனவிற்குள்
என் அனுமதியின்றி
உன்னால் மட்டுமே
உள்ளே நுழைய முடியும்!

இதோ இங்கு வீசும் காற்றுடனும்
பேச ஆரம்பித்துவிட்டேன்...
தோட்டத்து மரமும் தோழியாகி
யோசனை சொல்கின்றது!

இரவினில் தேம்பியழும்
பூனையின் அழுகுரலில்
எப்போதும் நடுங்கும் இதயம்
இப்போதெல்லாம் அதை
தடவிக் கொடுக்க தயாராகின்றது!

http://ts1.mm.bing.net/images/thumbnail.aspx?q=996704387972&id=7056ec1f50d2408087ec5ece02770fef
ஏதோ ஒன்றினால் இதயம்
பலமடையும் என்பதை
உன் வரவால் உணரமுடிகிறது!
இந்த உயிர்த்துடிப்பு இயங்குவதன்
நோக்கமும் உனக்கான ஆக்கம்தான்!

உனது நேசத்தின் நெருக்கத்தில்
அமைதியாகும் என் சோகங்கள்!
என் காதலின் பயணத்தில்
ஓய்வு என்பதே கிடையாது!

ஆதலால் அன்பே.....

கடையேழு வள்ளல்களின் கணக்கில்
ஒன்றை சேர்த்துக் கொள்கின்றேன்!
நான் இரவாமலேயே எனக்கு
இதயம் கொடுத்த நீயும் வள்ளல்தானே...!

http://ts2.mm.bing.net/images/thumbnail.aspx?q=957908266801&id=3e3bf0608889f7390baf960f3d954b53
இருப்பினும்
உன் இணக்கம் வேண்டிப் பெருகும்
தாபம் கரைக்க - இந்த
வெறும் நினைவுகள் மட்டும்
போதுமானதாயில்லை.....!!!

மருந்திடுவார் யாரோ?

இதோ
இந்த இருண்ட வானத்தின்
வாசற்படியில் வலுவிழந்து நிற்கின்றேன்...
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQkQ9C_fV0N2E-gJ2Sl4cpxyUd_mh5IZkoDLKBMO7WVeLuECXYH
எங்கே நான் விழுவது?
என் கரங்களின் ரேகையை
என் விதி அழித்துவிட்டது!

வாழ்க்கை என்னும் கடலில்
பயணிக்கும் போது
துடுப்புகளே தொலைந்து போனால்
தூண்டிலை வைத்து என்ன செய்வது?
http://1.bp.blogspot.com/_IWiW13J7nMM/SvrBh0wxFPI/AAAAAAAAAf8/igSpqfhxlYA/s400/Row+Boat+and+River.png
ஏமாறுதலின் ஏகாதிபத்தியமே
என்னிடம்தான் உள்ளது...
இருந்தும்
சாயம் பூசிய வண்ணக் கோழிக்குஞ்சாய்
வலம் வருகின்றேன் வீழ்வதறிந்தும்...!!
http://ts3.mm.bing.net/images/thumbnail.aspx?q=1012895327994&id=f528d43307f314c5fc5a1799c31a1cdc
என்னைத் தொடர்ந்து வந்த
என் பாதங்கள்
இப்போது என் பயணிப்பை
தனித்து விட்டுச் செல்கின்றன....

எப்போதும் பார்த்துக் கொண்டிருந்த
பூச்செடி
இப்போதெல்லாம்
கள்ளி செடியாகவே தெரிகிறது!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSECEMqtV4CogYp1ftPHIrl8v86JB0vKIcxTYrprCdyJr2Q_M2Oow
இதயம் முழுதும்
பாறையாகி விட்டதால்
விதைக்கும் விதைகளும்
வீரியமற்றே கிடக்கின்றன....

காலங்களை பிடித்திழுக்கும்
இந்த காயங்களில் மருந்திடுவார் யாரோ?
அந்தி சரிகின்ற போதெல்லாம்
என் புலம்பல்கள் புலம்பெயர
ஆரம்பிக்கின்றன....
http://i5.photobucket.com/albums/y175/nilavunanban/Love_Pain.jpg
விழிகள் விரிய விசாரிக்கின்றேன்
விருப்பத்தின் வாசலில் விளிக்கின்றேன்
விரையும் வினாடிகளிலும்
விதியோடு விளையாடுகின்றேன்...
Sunday, June 19, 2011

ஒற்றைச் சுவராய்......


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS7Giz7tJg7LYrPlUQ3_ZM843Gx4rmGeXRrZiqvABOQcjitqpcM
காதலின் ஊடலில்
செந்தனலாய் வார்த்தைகளை
நீ
வீசினாலும்
பொறுமையின் பாரத்தை
சுமத்தியதும் நீயல்லவா....


நீ
பயணிக்கும்போது
கடந்து செல்லும்
ஒற்றை மரத்தின்
நிழல்ல நான்...
உன்
பாதச் சுவடுகளின்
வழியே தொடரும்
உனக்கான ஈர நிழல் .....
http://www.desicomments.com/dc1/07/127160/127160.gif
என் நிலைப்பாட்டை
நீ
அறிகிறாயோ இல்லையோ
உன்
காலம் அறியும்!


விதி முடியும் முன்பு
மலரத் துடிக்கும்
என் கனவினை அள்ளி
உன் காலடியில் விரிக்கின்றேன்..
http://www.desicomments.com/dc1/07/127162/127162.gif
தூசு படிந்த இலையாய்
என்னுள் படிந்த
உன் நினைவுகளை
துடைத்து எடுக்க துணிந்ததில்லை
....


சுகத்தோடு வாழ்ந்த எனக்கு
இன்று
என் அகத்திற்கும் ஆபத்தாம்...
மன பாரம் ஏறி ஏறி
உடல் பாரம் குறைந்து விட்டது..

உன்னிடம் உரையாடமல் இருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் உணர்வுகளும் மெல்லமாய்
சாகடிக்கப் படுகின்றன...
http://www.desicomments.com/dc1/07/127164/127164.jpg
உறவைக் கொடுத்து
உயிரைப் பறிக்கும் வார்த்தைகளை
நீ கற்ற இடம்தான் எது...?

பகட்டாய் வாழ்ந்திருந்தவள்
இப்போது
பயணத்தின் வழியே பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவராய் நிற்கின்றேன் - உன்
நேசத்தின் மாறுதலுக்கப்புறம்...

http://www.tamilun.com/upload-files/raj/east/dsc00050_800x600-w600.jpg

Saturday, June 18, 2011

வரை பட நிழல்

சுவரில் தொங்கும்
வரைபட பறவையின்
நிழலில் கூட
நிஜமாய் நீ.....!
எத்தனையோ உறவுகள்
கண்முன்னே உறவாட
மனம் மட்டும் மௌனமாய்
தேடிப் போகிறது
வரை பட நிழலினுள்
இருக்கும் நிஜத்தை...!

http://www.netglimse.com/images/events/love/wallpapers/LoveRomanticWallpapers19_1152.jpg
தினமும்
ஏதோ ஒன்றை
தொட்டுக் கொண்டே
உன்
தொடர்பை தொடர்கின்றேன்!
தொடர்தல் முற்றுப்பெறாத
நதி நீராய்......

Tuesday, June 14, 2011

என்னவனே...வருவாயா?http://mixphotos.files.wordpress.com/2008/12/oceanic-lovers-jim-warren.jpg
அருகிலிருந்தும் அந்நியமாகும்
உறவுகளுக்கு மத்தியில்
அன்பின் ஆதவனாய் .... என்னவன்

இரத்த நாளங்களில்
எத்தனையோ ரணகளங்கள்
வருடிச் செல்லும்
மயிலிறகாய் .... என்னவன்

நித்தம் நித்தம் நினைவுகளில்
சிக்கித் தவிக்கும் நிலையில்
கை கொடுக்கும் தேவனாய் .... என்னவன்

தேடல்கள் யாவும் என்னை
தீண்டாமலே போகும் பொழுது
புதையல் பொக்கிஷமாய்...என்னவன்

நெருஞ்சி முள்ளாய் வாழ்க்கைப் பயணம்
வழிகாட்டும் வானவில்லின்
நந்தவனமாய் .... என்னவன்

அங்கத்தில் இடம்பிடித்தவனே....
http://3.bp.blogspot.com/_d6ArvShKVvM/TT5GBiPCYDI/AAAAAAAAAnc/iyciKSFR07Y/s1600/The-Lovers-1024x768-bandwidth-thiefA.jpg
விடியும் வரை உன் மார்பில்
நான் கண் துயில வேண்டும்
விடிந்தபின்னும் என் உறக்கம்
கலையாமல் பாதுகாக்க வேண்டும்

உன்னை நினைத்து நினைத்து
வாழ வேண்டும் உந்தன் மடியில்
உயிர் துறக்க வேண்டும் வருவாயா?
__._,_.___


Friday, June 3, 2011

இமைகளுக்குள் இன்னொரு உலகம்..

http://us.123rf.com/400wm/400/400/friday/friday0611/friday061100138/610993-the-image-of-the-girl-wrapped-up-in-a-fabric-on-a-background-of-bubbles.jpg


என்னையையும் ஆட்டுவிக்கும்
இந்த கனவானது.....
இமைகளுக்குள் ஒளிந்திருக்கும்
இனம்தெரியா உருவம்...
இது வருவதற்கு கால நேரமில்லை
பகலில் இதற்கு மதிப்பில்லை
மாலையில் ஒரு மார்க்கமாகத்தான்
உள்ளே நுழைந்து அறப்போர் செய்யும்
இமைகளுக்குள் இன்னொரு உலகமாய்....
நீண்ட இரவில் இது காட்டும்
வேலைத்தனத்தில் இரவின் தருணங்கள்
மென்மையாய் கடந்து செல்லும்
இல்லையேல்...
மொத்தமாய் ஆளைக் கடத்தி விடும்...
பிரம்ம நேரத்தில் இதன் போக்கிற்கு
எப்பவுமே தனி மவுசு உண்டு......
இமைகளுக்குள் இன்னொரு உலகம்.....
இயலாமை எல்லாமே இந்த கனவிற்குள்
இனியதாய் சங்கமமாகிவிடுவதால்
கனவின் தனித்தன்மையை
யாரும் மறுப்பதற்கில்லை....
கனவுகள் மெய்ப்பட்டால்
நிழல் மட்டுமல்ல நிஜமும்
தருமாறித்தான் போகும்..
.