Saturday, July 30, 2011

உன் புன்னகைப் பூக்கள்....

எங்கும்
சிதறிக் கிடக்கிறது
உன் புன்னகைப் பூக்கள்....

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ7XOlMhKRfJdvHRcgg4SUwFdAEoGSDIMf_tH1feP3-uVFUgqAJ
உயிர் எங்கும்
ஒட்டிக் கிடக்கிறது
உன் காதலின் கவிகள்...


ஆன்மாவின் அடிவரை பாயும்
அந்த வாக்கியங்களில்
என் பிறப்பின் நேரம்
பாக்கியமடைக்கின்றது...

http://www.vaarppu.com/2005/p/pookkal_nikath_jul05.jpg
அடிக்கடி ஞாபகத்திற்கு வரும்
உன் புன்னகை முகத்தில்
என் முகத்தைத் தேடியே
தொலைகின்றேன்....

உறக்கத்தின் உச்சியிலும்
தலையணை தவிர்த்து
உன் நினைவுகள் மீதே
தலை சாய்த்து படுக்கின்றேன்...

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQWOecEKWAfSJbAIH-IXbY-j9_YyC_U7buzoQFOIsiZxcfa7TYTNA
எப்போதோ நீ கொடுத்த
சத்தமில்லா முத்தத்தின்
சுவடுகள் இப்போதும் ஈரமாய்
என் கன்னங்களில் குளிர்கிறது!

உன் காதலில் எல்லாமே
நிறைவாகிப் போகின்றது - உன்
அருகாமையற்ற நேரங்களைத் தவிர...!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ8YOdnE11OVE9HpX1I8EyJYwUcx72uxFyq91NU2YFnUlw5IAnr
கவிஞனாய் பல கவிகள்
புனைந்தாலும் - உன்
மௌனமொழிகளுக்கு இதுவரை
ஒரு கவிதையும் என்னால்
ஏட்டில் ஏற்றமுடியவில்லை...!!

நீ ஆசானாய் பாடச்சுமைகளை
சுமக்கின்றாய் - நான்
உன் நினைவுச் சுமைகளை
நித்தமும் சுகமாய் சுமக்கின்றேன்...!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQZKCTJEkcbUIlYKcRUQk-Ttj3pDt84C9eKZcHFF4Yhx-EWn2s8
என் எழுத்துக்களில்
எழுதிவிட முடியாத
உன் காதலின் ஆழத்தை
நம் இருவரின் நெருக்கத்தில்
உணர்கின்றேன்...

துளி நம்பிக்கையிலும்
உளி வைத்து செதுக்குகின்றேன்
உன்னோடு பயணிப்பேன் என்று...

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ0QtNp6EgDez_Au6BX1L5rXKvek9FHdG7G996ZwnbJP2R41ta8
இந்த எதிர்பார்ப்புகள்
ஏமாற்றத்தை அளித்தாலும்
நீயில்லாத நீண்ட பொழுதுகளில்
மூர்ச்சையாகிப்போன
என் சுவாசங்கள்
உன் நேசிப்பில் மட்டுமே
உயிர்த்தெழுகின்றன...

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSbKQM8A1maBzHsqwqIJR4IXWuTS9eb0EWU-l4TODjIh1Hw-fgq6w
இதோ இந்த
நினைவுகள் எல்லாம் இப்பொழுது
விழிகொண்டு கண்ணீர்விட
காத்திருக்கின்றன....அழகிய நிலா !!!

http://www.hdwallpapers.in/thumbs/end_of_love-t2.jpg
அழகிய நிலா !!!
எப்போது பிறந்தாயோ ?
நிலவோ வளரும் தேயும்
நீயோ
வளர்ந்தே இருக்கிறாய்

எப்போது பூத்தாயோ ?
குறிஞ்சியின் இலக்கணம்
கொஞ்சமும் இல்லை
காதலெனும் நோய் செய்தாய்
கவிதையெனும் பூப்பெய்தாய்
காற்று மகள் வழியாக
கனவுகளை நெய்தாய் -- என்
உயிர் என்ன செய்தாய் ?

சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று
சொல்பவன் கவிஞன் இல்லை
வெல்வதற்கு வைத்திருக்கிறாய்
இதயம் முழுவதும் வெண்மையாய்
புருவம் வில்லாய்....கண்கள் வாளாய் ...
சொற்களும் வாய்மையாய்...
எண்ணங்களும் நேர்மையாய் - உன்
வண்ணங்களும் தூய்மையாய் ...

தென்றலே...
மொத்தத்தில் - நீ
அமைதிக் குளத்தில்
பூத்த அழகிய நிலா !!!

Friday, July 29, 2011

இனியென்ன சொல்வதற்கு ???


நான் கவிதை
எழுதுவதில்லை
என் காயங்கள் வலிப்பதில்லை
கோபங்கள் சுடுவதில்லை
ஏமாற்றம் வெறுப்பதில்லை

நானும் இருப்பதில்லை
பெயரளவில் இறப்பதில்லை ...

எரிகின்ற நெருப்பை வாங்கி
எனக்குள்ளே ஊற்றி ஊற்றி
புரிகின்ற காதல் பாடம்
போதித்த புத்தன் ஆவேன்

சரிகின்ற அழகில் கொஞ்சம்
சரியாமல் வாழ்ந்த நெஞ்சம்
புரியாமல் பேசிப் பேசி
போனது உன்னில் தஞ்சம்

கண்ணீரைத் துடைத்து விட்டு
கவிதைகள்
எழுதுகின்றேன்
பெண்ணே நீ பார்க்கும் போதும்
பொய் முகம் காட்டுகின்றேன்

செந்நீரும் சுண்டி
சேர்கின்ற காலமில்லை
சுடுகின்ற நெருப்பெடுத்து
சுடுவதும் காயமில்லை
வடுகொண்ட வார்த்தை எல்லாம்
வாசித்தே பழகிவிட்டேன்
நடுவானில் நிலவின்றி
நாட்களைத் தொலைத்து விட்டேன்

அவசரத் தேவைக்கு
அன்புதான் வேண்டுமென்று
அறிவிப்பு விட்டதில்லை
நீயறிவாய் என்னவென்று

கரையிலே விழுந்த மீனின்
கண்களில் கலக்கமில்லை
தரையிலே இருக்கும் மரத்தின்
இலைகளைக் காணவில்லை
என்பதனாலே எல்லாம்
இயல்பாக இருக்குதென்று
நம்புதல் இருக்குமானால்
நம்பிக்கை சிதைப்பதில்லை

இனியென்ன சொல்வதற்கு
இனிமேலும் கவி எதற்கு--
விடியட்டும் பொழுதெனக்கு
வழக்கம் போல் சுழல்வதற்கு ...

Thursday, July 14, 2011

தத்தி தத்தி தவழ்ந்து வந்த தமிழ்க்குழந்தை....

http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-snc6/281372_184258354969359_100001555869268_473602_2052429_s.jpg

தாயுமானவர் வழியனுப்ப
தமிழன்னை கரையேற்ற
கரம்பிடித்து மிதக்கின்றாள்
என் தமிழ்க்குழந்தை....!!

அந்தி சரிந்த நேரத்திலும்
என் தமிழ்க்கண்ணே - உன் வரவால்
இருளும் ஒளியாகிப் போவதென்ன!!

முல்லை மலர் காலெடுத்து
முத்துரத்தினமாய் பிரகாசிப்பவளிற்கு
இன்று ஏனம்மா சோகம்??

தென்பொதிகையில் பிறந்தவளே...
அரபிக்கடல் வரை வளர்ந்தவளுக்கு
அக்கறைக்குப் போவதற்கா கலக்கம்...!!??

எக்கறைக்குப் போனாலும் உன்
ராஜாங்கமே தலைத்தோங்கும் போது
கவலை வேண்டாமடி கண்ணம்மா.....

தேனை மறந்து வண்டாடலாம்
என் செல்லத் தமிழே - உனை
எப்படி மறந்தாடுவேனடி!

மூவேந்தர்கள் போற்றி வளர்த்ததும்
உன்னைத்தானடி..!! - என் கொடியவளே...
முக்கனியின் சுவையோடு கொண்டிருப்பதும்
உன் பெருமைதானடி..!! - என் கனியவளே....

இலக்கணமும், இலக்கியமும் கண்டவளே..
இன்னல்கள் கடந்து வந்தவளே... - இந்த
நதிநீரைக் கடப்பதா உனக்கு கடினம்?

கன்னித் தமிழாய் காலத்திற்கு அழியாத
காவியக் குழந்தையடி நீ... - உனக்கு
கங்கை நீரும் கானல் நீரடி...!!

மானுடம் கண்ட முதல் குழந்தையடி நீ..
மண்ணிற்கு வந்த முதல் மொழி தெய்வமடி நீ...
பார்வைக்கு எப்போதும் மழலையடி நீ...
ஆனால் எனக்கு எப்போதும் அன்னையடி நீ...

என் அன்பு செல்லமே...
அப்பன் எப்போதும் வழி நடத்த
அன்னை எப்போதும் உடனிருக்க
பாரெங்கும் சுற்றி வாடி என் கலையவளே..

பாவலர்கள் எப்போதும் உனை
சுற்றி சுற்றி சுகம் பெறட்டும்!!!
பார் போற்றும் பைந்தமிழே....
உன்னைச் சரணடைந்து
பாடுவதும் என் பாக்கியமே.....!!!


Tuesday, July 5, 2011

காதல் பயணம்....

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQq7A_1tKCIiTFCdfWAc9lzKPkqcHUF668ThZGpp0CncGrVAFYz

உதட்டு உப்பரிகையில் மிதமிஞ்சிய
பன்னீர்ப் புன்னைகையை
சிந்திவருபவனே....
உச்சியைத் தொடும் உலகத்தில்
ஓர் வீணையின் சிலிர்ப்புடன் நிற்பவனே....

ஒளிர்ந்து வந்த சூரியனில்
உன் கண்களின் ஒளி
பூமி முழுவதும் சிதறிக்கிடக்கின்றது...
மலர்களின் தீண்டலில் உன்
கவிதைகள் என்னை கைது செய்து
உன் வாசல் வரை அழைத்துச் செல்கின்றது...
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT33xTnMvdug4EC9a5XELKWfcAd3fgjA9tLIiPwbkNZRK0NwR5DOg&t=1
பதுங்கி வந்த பகல்நிலவாய்
உன் குளிர்த் தழுவல்கள்
என் உயிர் முழுதும் பரவிக்கிடக்கிறது.....
உன்னை அழைக்கும் போதெல்லாம்
எனக்குள் உறைந்திருக்கும் உயிர்நதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது...

உன்னோடு உரையாடும் போதெல்லாம்
எனக்குள்
ஒளிந்திருக்கும் துக்கங்கள்
குறைக்கப் பட்டிருக்கின்றன....
http://www.desicomments.com/dc1/07/127164/127164.jpg
விடியும் பொழுதெல்லாம்
சின்னதாக சொல்லித் துவங்கும்
காலை வணக்கத்தில்
ஆரம்பிக்கும் எனக்கான பொழுது
நீ இரவு வணக்கம் சொன்னபிறகுதான்
முழுமையடைகின்றன ......

உனக்குள் இடப்பெயர்ச்சி செய்த
என் இதயத்தின் ஒரு பகுதி - நீ
இப்பொழுது இடம் பெயர்ந்ததால்
உன் தெருவோர வீதியில் கிடக்கின்றது!
முடிந்தால் அதை பத்திரப்படுத்து
உன்னைத் தவிர என்னை வேறு
யாராலும் பாதுகாக்க முடியாது....

உனக்கும் எனக்கும்
இப்பொழுது
ஓர் எல்லையில்லாப் பயணம்
தேவைப்படுகிறது...
பயணம் என்பது வெளிப்பயணமல்ல
நமக்குள் நாமே செல்லும்
புனிதப்பயணம் காதல் பயணம்....

Saturday, July 2, 2011

காலாவதியாவதில்லை...!

நேற்றைய பகல் முதல்
அந்திவரை நீண்டிருந்த
நேரம் முதல்
உன் அருகாமையற்ற
வேலையின் கனத்தை
அறியத்தொடங்கினேன்...!

இல்லாத தூக்கத்தின் கனத்தை விட

நீயில்லாத ஏக்கத்தின் கனம்
மிகக் கொடுமையானது...!

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQAc2FubO_iJQNJnoh5LjIck9u3Skbi6ExwHvgy9G_znHo5un52
நீ அருகில் இல்லாத போது இருக்கும்
உன் மீதான கோபம் உன் அருகாமையில்
அர்த்தமற்று தோற்றுப் போகிறது!
காதலும் அதுபோல்தான்... - உன்
ஒரு நாள் விலகளில்தான் அதன்
அருமையை உணர முடிகிறது.......

எங்கும் பேரமைதி
இருளாய் எனைச் சூழ
சாகசங்களை நோக்கிச் சென்றவள்
இப்பொழுது வீழ்ச்சியின்
எல்லை வரை சென்று திரும்ப
முடியாமல் தினம் தவிக்கின்றேன்...

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRJ5ErgcAGgsYEnZV1wY3Ng9M5MOqVI3DLd1Gm8xMhUR3iliUizYw
எதிலும் முழுமையான
அனுபவங்கள் இல்லாததால்
அவற்றின் ஊசல் மட்டுமே
ஊஞ்சல் ஆடுகிறது...
ஆனபோதும்
அக்கறையின் பச்சைக்கு
ஆசைப்படுபவள் நானல்ல....!!!

எழுதப்படும் எனது கவிதைகள்
வேண்டுமானால்
காலாவதியாகலாம்! - ஆனால்
ஒருபோதும் என்காதல்
காலாவதியாவதில்லை...!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR9lxp4K8ij_PqWWCPGuvZ1q53X6QucgAl52RiDQwWJ7PMi0IruRw
இதோ
இந்த அறையின்
நான்கு மூலைகளில்
ஒன்றில் நீ....
மற்றொன்றில் உன் காதல்
ஒரு மூலையில்
உனக்கான என் கவிதைகள்
மற்றொரு மூலையில்
உன் குரலின் எதிரொலி
பெரும்பான்மையானவை
உன்னாலேயே நிரப்பப்படுகின்றன....!!!