Wednesday, August 31, 2011

சிக்குண்டு கிடக்கும் சின்ன இதயம்....

http://2.bp.blogspot.com/_Q40d0KkwcZs/TFuUupm2f6I/AAAAAAAAAYY/xFqINNHLkro/s1600/Love%2520photos%2520(5).jpg

காதலனே.....
காத்திருந்தேன் உன் காதலின்
வலிமையை வாய்மொழியாய் - நீ
என்னிடத்தில் பறைசாற்ற...


உறக்கமற்ற இரவில்
உரிமையாய் அழைத்தாய்....
செல்லமே...
தேகம் சிலிர்க்க நிமிர்ந்தேன்
தேக்கிவைத்த கண்ணீர் - உன்
விரல்பட்டு சிதறிவிழ...

மெல்லமாய் இழுத்து
இதமாய் அரவணைத்து
காதுகளின் ஓரத்தில் - உன்
சுவாசத்தை இயக்கி.....
உன் ஸ்பரிசத்தை என்னவென்று
சொல்லி மாய்வது?

சொல்லமுடியா சோகத்தில் - நான்
சோர்ந்து போய் நிற்கும்போதெல்லாம்
எனை சுகப்படுத்தி பார்ப்பதையே
வாடிக்கையாக்கி சுகப்படும் - உன்
சின்ன இதயம் இன்று என்னிடம்
சிக்குண்டு கிடக்கிறது....

ஜென்ம ஜென்மாய் தேக்கிய
ஏக்கங்கள் இன்று - உன்
பார்வையின் பயனால்
தீர்ந்து சரிகின்றது....

என் கண்ணில் மட்டும் நீ
கலந்துறவாடவில்லை...
என் ஆத்மாவினிலும்
ஐக்கியமானவன்...


இது
நீ எனக்குத் தந்த வரமா?
இல்லை
காலம் உனக்குத் தந்த சாபமா?

என் இதயமும், விழிகளும்
மூடித் திறக்கும் நேரத்தில்
எல்லாம் இனி நீ நிற்பாய்
என்ற நம்பிக்கையில் - உன்
தோள் சாய்கின்றேன்

Friday, August 26, 2011

கண்ணான ராசாவே .....

http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/301353_204796679582193_100001555869268_538975_8212694_n.jpg

கொங்கு நாட்டு கோமகனை
கொளத்தோரம் காணலியே...
சேரநாட்டு சின்னவனை
சோளக்காட்டோரம் காணலியே..
கரும்புக் காட்டுப் பக்கத்தில
காலை மாலை காத்திருந்தேன்
காணாமல் போன மச்சான்
கருக்களிலும் காணலியே...

தங்கச் சிலையாட்டம்
தவிச்சுத்தான் நானிருக்கேன்
தங்கமான மச்சானை
தாலிகட்டவும் காணலியே...
நேசமுள்ள மச்சானே...
நெஞ்சாவி துடிக்குதய்யா
உன்னைக் காணாமல்
காப்படி உசிரும் கூட
கருத்தேதான் போச்சுதய்யா..

என்
நேர்வகிட்டு உச்சியிலே
உன் உசிரைத்தான்
நிறைச்சு வச்சேன்...
உன் உதட்டோர மீசையில
என் உசிரைத்தான்
புதைச்சு வச்சேன் புரியலியா..
தலையெண்ணெய்
வழிஞ்சு போனாலும் - என்
எண்ணம் மட்டும் வழியலியே...
சாதிசனம் வந்தாலும்
தயங்காமல் சொல்லிடுவேன்

கரிசல் காட்டு பூமியிலே
நான்
காத்திருந்த வேளையில - நீ
பூசு மஞ்சள் விதைச்சுவச்ச
இடமெல்லாம்
உன் பாதத்தோட வாசம்தான்
பாசமா படர்ந்திருக்கு...
நேசமா நீ நெருங்குவது
எப்போது?


நெல்லுக்கதிராக நெடுந்தூரம்
வளர்ந்து நின்னேன்...
கோவை கொய்யானு
என்னை கூப்பிட்டு சிரிப்பானே
ஆசையில ஓடிவந்தா
அள்ளித்தான் அணைப்பானே..
ஆசையுள்ள மச்சானே - நீ
கோபப்பட்டும் போகலியே
பொழுது சாயும் காணலியே...

செவ்வந்தி தோட்டத்தில
சேதி ஒன்னு வச்சிருக்கேன்
சீக்கிரமா நீ வந்தால்
சூசுகமா சொல்லிருவேன்...
கண்டாங்கிச் சேலையிலே
கட்டில் ஒன்னு செஞ்சிருக்கேன்
எட்டு முழ வேட்டி கட்டி
நீ வந்து சேருமய்யா.....
அடுத்த வீதி ஆசாரியிடம்
தொட்டில் ஒன்னு செய்யச் சொல்லி
துட்டும் தான் கொடுத்திருக்கேன்...


கருவாச்சி நானிங்கே
காரக் குழம்பு ஆக்கி வச்சேன்
கருத்த மச்சான் நாவிற்கு
நளபாகம் நாளும்தான்
நோகாமல் செஞ்சுவச்சேன்
நோன்பு பல நானிருந்தேன்

நொய்யலாற்றங் கறையினிலே
ஒன்னோட குழலுச்சத்தம்
நொடிக்கொருதரம் கேட்குதய்யா
பாவிமக பாட்டுக் கேட்க - உன்
பாழும் நெஞ்சு துடிக்கலையா...

பக்கத்தில சொந்தமிருந்தும்
துக்கத்தில் நானிருக்கேன்
வாக்கப்பட்டு வருபவளை
வாயாட விட்டு விட்டு
வழிமாறிப் போனதேனோ

புதன் கிழமை சந்தையிலே
வாங்கி வந்த காளை கூட
பொழப்பு நடத்த சோடி தேடுதய்யா
புழக்கடைக்கு பக்கத்திலே
பொழம்பியே கிடக்கிறேன்

நெஞ்சுக்குள்ள இருந்த ஒன்னை
கண்ணுக்குள்ள பூட்டிவச்சேன்
கண்ணுறக்கமில்லாமல்
களைப்பாகி கற்பூரமாய்
கரைஞ்சேனே.....

வெளியூரு சென்றிருந்தால்
கடிதம் ஒன்னு
வரைஞ்சிருப்பேன்
சென்ற இடம்
தெரியவில்லை
விலாசம் எதுவும்
அறியவில்லை!
கண்ணீரில் கடிதம் எழுதி
காற்றோடு அனுப்பி வச்சேன்
கண்ணான ராசாவே
கைக்கு வந்து சேர்ந்துச்சா?Saturday, August 20, 2011

காதல் வெல்லுமா

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSU5O0ZhPo81T80HW7l9vdfKtfb64KhFn8qnAYq5NJyxG9O12ZX

கண்ணை மட்டும்
கசக்கத் தெரிகிறது
காதலை சொல்லத்
தெரியவில்லை
கண்ணீர் மட்டும்
காரமாய்க் கரிக்கிறது
காயங்களை ஆற்றத்
தெரியவில்லை

கற்றுக்கொண்ட வார்த்தைகள்
கவனமாய் வெளியேறியும்
கனத்துப்போன இதயமோ
காதலை சேமித்து வைக்கிறது
கடந்து போன நினைவுகளோ
கவிதைகளோடு போரிடுகிறது
http://th08.deviantart.net/fs29/300W/i/2009/067/6/5/Bloody_Field_by_SadGirl311.jpg
குறையாத நேசிப்போடு
குவிந்த புன்னகையில்
கலைந்து போன கனவுகளோ
கண் முன்னே கண்ணாடியாகிறது
காட்சிகள் யாவும் கலைக்கப்பட
கலவரம் சூழ்கிறது நெஞ்சுக்குள்ளே

கசக்கி எறியப்பட்ட காகிதமாய்
கவலைகள் கடைந்தெடுக்க
காதலின் வலி மிகுந்த காலங்களை
காரணத்தோடு மறைக்கின்றேன்
கன்னக்குழியில் விழுந்த கண்ணீரை
காற்றோடு கறைக்கின்
றேன்
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSn6HgRvLPj6npTmd1Gqkv4ON_dQH6hq0XlaXbdNWhC5vCAWhyx
காலத்தின் மௌனத்தை
காதல் வெல்லுமா
காத்திருத்தலின் நேரத்தை
காயங்கள் சொல்லுமா
கோலத்தின் தனிமையில்
கொண்டதெல்லாம் வரமே...
வேண்டும்....


காலையும் மாலையும்
காரிருள் வேளையும்
கண்ணோடு - உனை
காணவேண்டும்...
காணாதபொழுதெல்லாம்
மண்ணோடு நானும்
மடியவேண்டும்...

உனக்கானதெல்லாம்
தேடித் தேடி
கொணரவேண்டும் - நீ
வாடியபொழுதெல்லாம்
உனை
நாடி நாடியே
வாரியணைத்திடல் வேண்டும்...

உன்னோடு
ஓடி ஓடியே
பாடித் திரிந்திட வேண்டும்
அதிலே மனம்
ஆடி ஆடியே களித்திட வேண்டும்
தமிழால் உனைப் புகழ்ந்து
கோடி கோடியாய் கவிகள்
புனைய வேண்டும்...

அறுகம்புல்லின் அமைதியாய்
உனை
ஆட்கொள்ள வேண்டும்...
ஆலம் விழுதின் ஆசையாய்
உனை
நேசித்திட வேண்டும்...
இளகும் நெஞ்சம் முழுவதுமே
உனை
நிறைத்தே நினைந்திருக்க வேண்டும்....

உன்
அன்பின் அலையில்
அடித்தே செல்லவேண்டும்...
என்
ஆன்மா அடங்கும்போது
உன்
மடிசாய்ந்து மடிந்திடவேண்டும்...