
விழிகளில் உற்சவம் நடத்தி விளையாடியவள்
விழிமுழுவதும் கடலாய் கோர்த்திருந்தேன்...
வார்த்தைகளற்ற வாக்கியங்களுடன்
மௌனம் மட்டுமே மொழியாக வியர்த்திருந்தேன்...
பகல் இரவு இல்லாத வாழ்க்கையை
உன்னுடன் பகிர்ந்து வாழ காத்திருந்தேன்...
இதயக் கூட்டிற்குள் உன்னை மட்டும்
இமயமாய் வைத்துப் பார்த்திருந்தேன்...
நினைவிழந்த நிலையிலும் _ என்
நிதானம் தவறாமல் உன்னை சரணடைந்தேன்...
காலங்கள் யாவும் உன் மடி தேடி
காதலாய் என் கண்ணியம் காத்திருந்தேன்...
தூணிலும் துரும்பிலும் இறைவனாம்!!!
உணர்வற்ற இடங்களில் அவன் மட்டுமே...என்
ஊணிலும் உயிரிலும் நீதானடா!!!
உணர்வும் உலகமும் நீ ஒருவன் மட்டுமே...
3 comments:
present
:-)
உங்களை பற்றி சொல்லியுள்ள விதம் உங்கள் பெயருக்கு ஏற்றமாதிரி இல்லை
நன்றி ஷர்புதீன்....:-)
இது என் பெயரல்ல. புனைப்பெயரிலாவது அது நிலைத்திருக்கட்டுமே....நன்றி தமிழ் உதயன்...:-)
Post a Comment