Monday, August 13, 2012

நினைவாலயம்.....

அன்பென்னும் ஆயுதம்
நுட்பத்திலும் நுட்பமானது
அன்பென்ற விதையை
இருவரும்
தூவிக்கொண்டோம்..- செடி

துளிர்த்து வளர்ந்தது
நாளுமாய்...
உன்னை நேசித்தவள்
உலகையே நேசிக்கலானேன்
அன்பே அனைத்துமாய் நின்றது...
அன்பே வேருமாகி
அன்பே விருட்சமுமாகி...
நமது அன்பென்னும் ஆலயம்
படர்ந்தன எல்லையில்லாமல்....
நிலைகொள்ளாமல் வீசுகின்ற
காற்றினைப் போல்
அங்குமிங்குமாய் அலைக்கழிந்த நான்
உன் அன்பினால்
உன்னைச் சுற்றியே பனியானேன்..
என் இமைகளின் துடிப்பிலும்
உன் பெயர் அன்பாய் ஒலிப்பதால்
வார்த்தைகள் இல்லா கவிகளையே
வடிவமைக்கின்றேன்....
உன் அன்பான அசைவுகளில்
என் ஆத்மாவும் அசைவதால்-என்
சீவனின் அலைகள்
உன் பாதங்களைத் தொட்டே
பயணிக்கின்றன....
அன்பின் வழியில்
விருட்சமளவு உன்னைப் புரிந்திருந்தாலும்
என் புரிதலுக்கு அப்பால் அல்லவா!
நீ இருந்தாய்! நீயொரு மர்மதேசம்!
இந்த இரகசியமே - இன்றும்
நம் காதலைக் காத்து வருகிறது!
தண்ணீராய் நின்றவனே...
என் செந்நீரில் கலந்தவன் நீ!
இந்த இரத்தத்தின் இவ்வுறவு - ஒரு
அன்பின் - காதலின்
நினைவாலயமாய்த் திகழட்டும்...

2 comments:

Suresh Subramanian said...

நீயொரு மர்மதேசம்!
இந்த இரகசியமே.. yes.. nice line

பிரேமி said...

நன்றி தோழமையே... தொடர்ந்து காதலாற்றுப்படையுடன் இணைந்திருங்கள்....:-)