Friday, May 3, 2013

நீரூறும் கண்கள்....

இதயச் சுமைகளை
இறக்கி வைத்து இளைப்பாற
இன்னுமோர் இடம்
கிடைத்தபாடில்லை!

வாடிக்கொண்டே வளரும்
வாழ்க்கையில்
வசந்தத்தின் பக்கம்
அசதிக்குக்கூட அருகில்
வந்தபாடில்லை!

கனவுகளெல்லாம்
உணவுகளோடு செரிமாணமாக
ஆசைகளெல்லாம்  நிராசைகளாய்
நெஞ்சுக்குள் புதைந்து கிடப்பதை யாரும்
அறிந்தபாடில்லை!

தண்ணீருக்காய் தவமிருக்கும்
கற்றாழைச் செடியைப்போல்
அன்பிற்காய் தவமிருந்து
தரிசு நிலமாய்க் கிடப்பதை ஒருவரும்
உணர்ந்தபாடில்லை!

நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரங்கள்
நெருஞ்சி முள்ளாய் நெருடுகையில்
நீரூறும் கண்கள் கண்ணீரில்
கரையாமலிருக்கட்டும்..!
இருதயமோ உடைந்து
போகாமலிருக்கட்டும்...!!





 

3 comments:

சீராளன் said...

நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரங்கள்
நெருஞ்சி முள்ளாய் நெருடுகையில்
நீரூறும் கண்கள் கண்ணீரில்
கரையாமலிருக்கட்டும்..!
இருதயமோ உடைந்து
போகாமலிருக்கட்டும்...!!

அழகிய வரிகள் வாழ்த்துக்கள் பிரேமலதா

பிரேமி said...

நன்றி சீராளன், தொடர்ந்து காதலாற்றுப்படையுடன் இணைந்திருங்கள்...:-)

Rajkumar R said...

தங்களின் கவிதைகள் அருமை ! இன்று தான் முதல் முறையாக உங்கள் வலைப்பூவை பார்வை இடுகிறேன் !!!