தாயுமானவர் வழியனுப்ப
தமிழன்னை கரையேற்ற
கரம்பிடித்து மிதக்கின்றாள்
என் தமிழ்க்குழந்தை....!!
அந்தி சரிந்த நேரத்திலும்
என் தமிழ்க்கண்ணே - உன் வரவால்
இருளும் ஒளியாகிப் போவதென்ன!!
முல்லை மலர் காலெடுத்து
முத்துரத்தினமாய் பிரகாசிப்பவளிற்கு
இன்று ஏனம்மா சோகம்??
தென்பொதிகையில் பிறந்தவளே...
அரபிக்கடல் வரை வளர்ந்தவளுக்கு
அக்கறைக்குப் போவதற்கா கலக்கம்...!!??
எக்கறைக்குப் போனாலும் உன்
ராஜாங்கமே தலைத்தோங்கும் போது
கவலை வேண்டாமடி கண்ணம்மா.....
தேனை மறந்து வண்டாடலாம்
என் செல்லத் தமிழே - உனை
எப்படி மறந்தாடுவேனடி!
மூவேந்தர்கள் போற்றி வளர்த்ததும்
உன்னைத்தானடி..!! - என் கொடியவளே...
முக்கனியின் சுவையோடு கொண்டிருப்பதும்
உன் பெருமைதானடி..!! - என் கனியவளே....
இலக்கணமும், இலக்கியமும் கண்டவளே..
இன்னல்கள் கடந்து வந்தவளே... - இந்த
நதிநீரைக் கடப்பதா உனக்கு கடினம்?
கன்னித் தமிழாய் காலத்திற்கு அழியாத
காவியக் குழந்தையடி நீ... - உனக்கு
கங்கை நீரும் கானல் நீரடி...!!
மானுடம் கண்ட முதல் குழந்தையடி நீ..
மண்ணிற்கு வந்த முதல் மொழி தெய்வமடி நீ...
பார்வைக்கு எப்போதும் மழலையடி நீ...
ஆனால் எனக்கு எப்போதும் அன்னையடி நீ...
என் அன்பு செல்லமே...
அன்னை எப்போதும் உடனிருக்க
பாரெங்கும் சுற்றி வாடி என் கலையவளே..
பாவலர்கள் எப்போதும் உனை
சுற்றி சுற்றி சுகம் பெறட்டும்!!!
பார் போற்றும் பைந்தமிழே....
உன்னைச் சரணடைந்து
பாடுவதும் என் பாக்கியமே.....!!!
4 comments:
:-)
Nice
மிக்க மகிழ்ச்சி ....தொடர்ந்து கவிதையுடன் இணைந்திருங்கள் . நன்றி :-)
தத்தி தத்தி தவழ்ந்து வந்த தமிழ்க்குழந்தை..//
அழகு தமிழ் குழந்தைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Post a Comment