சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....
Tuesday, July 5, 2011
காதல் பயணம்....
உதட்டு உப்பரிகையில் மிதமிஞ்சிய
பன்னீர்ப் புன்னைகையை
சிந்திவருபவனே....
உச்சியைத் தொடும் உலகத்தில்
ஓர் வீணையின் சிலிர்ப்புடன் நிற்பவனே....
ஒளிர்ந்து வந்த சூரியனில்
உன் கண்களின் ஒளி
பூமி முழுவதும் சிதறிக்கிடக்கின்றது...
மலர்களின் தீண்டலில் உன்
கவிதைகள் என்னை கைது செய்து
உன் வாசல் வரை அழைத்துச் செல்கின்றது...
பதுங்கி வந்த பகல்நிலவாய்
உன் குளிர்த் தழுவல்கள்
என் உயிர் முழுதும் பரவிக்கிடக்கிறது.....
உன்னை அழைக்கும் போதெல்லாம்
எனக்குள் உறைந்திருக்கும் உயிர்நதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது...
உன்னோடு உரையாடும் போதெல்லாம்
எனக்குள்
ஒளிந்திருக்கும் துக்கங்கள்
குறைக்கப் பட்டிருக்கின்றன....
விடியும் பொழுதெல்லாம்
சின்னதாக சொல்லித் துவங்கும்
காலை வணக்கத்தில்
ஆரம்பிக்கும் எனக்கான பொழுது
நீ இரவு வணக்கம் சொன்னபிறகுதான்
முழுமையடைகின்றன ......
உனக்குள் இடப்பெயர்ச்சி செய்த
என் இதயத்தின் ஒரு பகுதி - நீ
இப்பொழுது இடம் பெயர்ந்ததால்
உன் தெருவோர வீதியில் கிடக்கின்றது!
முடிந்தால் அதை பத்திரப்படுத்து
உன்னைத் தவிர என்னை வேறு
யாராலும் பாதுகாக்க முடியாது....
உனக்கும் எனக்கும்
இப்பொழுது
ஓர் எல்லையில்லாப் பயணம்
தேவைப்படுகிறது...
பயணம் என்பது வெளிப்பயணமல்ல
நமக்குள் நாமே செல்லும்
புனிதப்பயணம் காதல் பயணம்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment