Friday, September 28, 2012

அன்பெனும் வரம்....

இங்கு யாவரும்
இடம் பெயர மட்டுமே
பொழுதுகள் புலர்கின்றன!
இயற்கையை ரசிக்க இங்கு
இமைகளுக்கு நேரமில்லை!
இதயம் கூட இயந்திரமாய்
இயங்குவதால் பயத்தோடே
வாழ்க்கையும் பயணமாகிறது...
வானத்து ஓவியங்களை ரசிக்க
நாட்காட்டியில் நாள் பார்க்கபடுகிறது...
தாயின் மடிதேடும் குழந்தைக்கும்
குறிக்கப்படுகிறது ஞாயிற்றுக்கிழமை!
வாரநாட்களில் அவர்கள் வளர்வதற்கு
விலை பேசப்படுகிறார்கள்....

இருவர் ஒருவராகும்
இரவு உறவும் இறுகிப்போக
இதய உறவுகளில் கருமை படர்கிறது...
விரல் அழுக்கை அகற்ற
நகத்தை வெட்டி எறிவதுபோல்
விவாகப் பிணைப்புகள்
எப்போது வேண்டுமானாலும்
வெட்டி எறியப்படுகின்றது..
கூட்டுக் குடும்பங்கள்
ஏட்டுச்சுரைக்காயாய்த் தெரிவதால்
பண்பாடுகள் அனைத்தும்
மண்ணிற்குள் புதைந்து கிடக்கிறது...
குறை கூறுவதே இங்கு
நிறையாய் ஊறிக்கிடக்கிறது...
அவசியத் தேவைக்கு மட்டுமே
அன்பு அலைமோதுகிறது...
காட்சிகள் எல்லாம் பிழையாய்த் தெரிவதால்
பட்சிகள் கூட இங்கு பாம்பாய்த் தெரிகின்றது...
உருவாகும் உயிர்களனைத்தும்
உருகித்தவமிருப்பதோ
அன்பெனும் வரத்தைப் பெறுதற்கே...

3 comments:

www.eraaedwin.com said...

அன்பற்றுப் போனால் எதுவும் இறுகித்தான் போகும் பிரேமி.
அருமை

kavignar ara said...

arumai அருமை ஆக இருக்கு
பெண்மை உண்மை மென்மை மேன்மை விரவி கலந்த படையலாய்...

ஆரா

பிரேமி said...

நன்றி தோழமைகளே... தொடர்ந்து காதலாற்றுப்படையுடன் இணைந்திருங்கள்....