கவிதையின் கருத்துருவே!
’உள்ளன்பு’ உணரவில்லை
உன்னைக்காணும் வரை...
இதற்கு மேல் சொல்லவும்
மொழியில்லை என்னிடம்...
என்னை நேசித்து நெகிழ்ந்தவனே...
உன் மனம் நோகாமல் இருந்து
உன் மனம் நோகாமல் இருந்து
இறக்கத்தான் நினைக்கின்றேன்...
பச்சைப் பசேலெனும் தோட்டத்தினூடே
பலகவி படைக்கும் உன் வார்த்தைகள்
சொல்லும் உன் காதலை...
இச்சை கொண்ட இதயம் இனித்திட
இலகுவாய் வார்த்தைகளை வீசுவாயே...
அதுதான் நான் உணரும் கீர்த்தனை..!!
எத்தனையோ விடயங்களை
அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும் இருந்தவள்
முழுமையாய்ப் புரிந்தது
உன்னை மட்டுமே....
எத்தனையோ கசப்புகள்
நம்மிடையே தோன்றினாலும்
விழிநீரில் தள்ளாடும்போதெல்லாம்
கசிந்துருகி உன்னிருப்பை - என்னிடம்
வார்த்தைகளால் வாஞ்சையாய் கொட்டுவாயே
இதுதான் காதலா....?
சிறு குழந்தை போல் அடம்பிடித்து
அழுது ஆர்ப்பரிக்கும் என்னை
இழுத்து அரவணைத்து - உன்
ஆத்மார்த்தமான அன்பை
உள்ளங்கை சூட்டினால் அழுத்திப்
பிடித்து ஆறுதலளிப்பாயே....
அதுதான் காதலோ....?
நலமின்றி துவண்டிருந்த நேரத்தில்
நொடியும் விலகாமல் - ஒரு
தாய்மையாய் தாங்கினாயே....
மீண்டும் நலமிழக்க இதயம் ஏங்குகிறது!
காதலின் கவித்துவத்தை - உன்
வாசனை வரிகளால் சுவையோடு
நீ சொல்லி இதழ் பதித்த - என்
காதுமடல்கள் இன்னும் சிவந்தபடி....
உனைப் பிரியும் நேரங்களிலெல்லாம்
விழிகளிலிருந்து பிரியும் நீரை - உன்
பார்வையினால் தடுத்து நிறுத்தி
எவரும் அறியாமல் தலையசைப்பாயே...
அந்த தருணங்கள் மீண்டும் வேண்டாமடா!
என்னை ஆறுதல் படுத்தி - நீ
கலங்கிபோய் கையசைப்பாயே....
இந்த நிறைந்த காதலிற்கு முன்
வேறெதுவுமே எனக்கு மிகச்சாதாரணமடா......
3 comments:
ஒரு காதலி, ம்னைவியாகி... கசிந்துருகி.. தன் கணவனைப் பற்றி எழுதிய விதம் அருமை.... ரிஷ்வன்... http://www.rishvan.com
என்னவோ போ மாதவா, கவிதையெல்லாம் சற்று மனம் கணக்கா செய்யும் செய்யுளாகவே இருக்கிறது
அருமை!! இனிமை !!!
Post a Comment