வாக்கு சொல்லி வன்மையாய் வம்பளந்தவரே
போக்கு காட்டி பொழப்புத்தனம் செய்தவரே
இட்டுக் கட்டிப் பாடுற புள்ளையை
சட்டென விட்டுப் போறதென்னவோ?
பட்டணத்து வண்டியிலே பவுசாகப் போறவரே
விரைவு வண்டி நீயேறி விரைவாகப் போகையிலே
குருத்தான எம் மனசும், சிறுத்தான என்னுடம்பும்
கருத்தேதான் போகுமய்யா; கரையேறி வாருமய்யா
கரை வேட்டி கட்டிக்கிட்டு கரம் தூக்கி
கடவுளை நீ கும்பிடுகையில்
கருப்பண சாமியா கண்முன்னே
காட்சியா நிற்குறீரே......!!
ஒத்தையிலே நானிருந்தாலும்
சத்தான உம் பேச்சும் சங்கடமில்லாமலே
முத்தாக முறையாக இனிக்குமய்யா...
மத்ததெல்லாம் மறந்தேதான் போச்சுதய்யா....
சொப்பனத்திலே நான் மிதந்தேன்
சொந்தமாக உனை நினைச்சு
கப்பங்கட்டும் அடிமை போல
கருக்களிலும் காத்திருப்பேன்...
ஊட்டி மலைச் சாரலிலே
பாட்டுக் கட்டி இருந்திருப்பேன்
அலையடிக்கும் கடல் போல
அடிமனசில் தவிச்சிருப்பேன்
உம் பேச்சு கேட்காமல்
ஒரு நாழி இருந்ததில்லை!
மௌனத்தில் நீ போய் உட்கார்ந்தா
மரணத்தோட பேச்சு வார்த்தை நடத்திருவேன்....
மூவாறு நாளைக் கடத்திட
வழியேதும் தெரியவில்லை....
மூணு ஜென்மம் கடந்தது போல்
முழியும்தான் பிதுங்குதய்யா...
பொட்டச்சியின் பொலம்பலில்
பொட்டல் வெளியும் நடுங்குது
சொந்தமென்று யாருமில்லை - என்
சொர்க்க புரியும் நீதானய்யா...!
கால நதியின் கார்மேகமே - என்
கண்ணீரின் அருமருந்தே
கரம் பிடித்து நீ சொன்ன - உன்
கவியே என் ஆறுதலய்யா...!
தாலி ஒண்ணு கட்டிக்கிட்டு
தாரமாய் உன்னோட வாரேனய்யா
தங்கமகன் நீ இல்லேனாலும்
தரம் கெட்டுப் போகமாட்டேனய்யா.....
4 comments:
என்னங்க, இது எந்த ஊரு தமிழு?, ஒரே உக்கிரமா இருக்கு கவிதையில?
அய்யோ.... அப்ப நல்லா இல்லையா ஷர்பு?
திடீரென ஒரு கலோக்கியல் பாசையில் உங்களாது கவிதையையும், அதில் கோபம் தெறிக்கும் கவிதை வரிகளும் அவ்வாறு எழுத சொன்னது!
கவிதாயினி என்று பட்டம் கொடுத்திடலாம்! சரியா!
அந்த ஓவியம் குறித்து எதுவுமே சொல்லலையே?
அக்கா ”பேச்சு வழக்கு” கவிதை அசத்தல்
Post a Comment