வீரியமாய் பெய்யும் மழைக்கு
ஒரு கவிதை
மெலிதாய் விழும் தூரலுக்கு
ஒரு கவிதை
சில்லென்று வீசும் தென்றலுக்கு
ஒரு கவிதை
மெல்லமாய் எட்டிப்பார்க்கும் கதிரவனிற்கு
ஒரு கவிதை
வெட்கமாய் மறைந்து செல்லும் நிலவிற்கு
ஒரு கவிதை
மழையை சபித்துப் பறக்கும் பட்சிக்கு
ஒரு கவிதை
பரந்து கிடக்கும் இலைச்சருகுகளுக்கு
ஒரு கவிதை
மழை நீரில் விளையாடும் மழலைக்கு
ஒரு கவிதை
என்னை அறிமுகம் செய்த அப்பா அம்மாவிற்கு
ஒரு கவிதை
இத்தனையும் கொடுத்த பரம்பொருளுக்கு
ஒரு கவிதை
பார்த்து ரசிக்கும் பலவற்றுக்கு
ஒரு கவிதை
தினமும் இப்படித்தான்
எழுத எத்தணித்து அமர்கின்றேன்
காகிதத்தில் நீ...
அத்தனையும் மறந்தபடி
ஆரம்பிக்கின்றேன் மறுபடியும்
உனக்கான கவிதையை!!
ஒரு கவிதை
மெலிதாய் விழும் தூரலுக்கு
ஒரு கவிதை
சில்லென்று வீசும் தென்றலுக்கு
ஒரு கவிதை
மெல்லமாய் எட்டிப்பார்க்கும் கதிரவனிற்கு
ஒரு கவிதை
வெட்கமாய் மறைந்து செல்லும் நிலவிற்கு
ஒரு கவிதை
மழையை சபித்துப் பறக்கும் பட்சிக்கு
ஒரு கவிதை
பரந்து கிடக்கும் இலைச்சருகுகளுக்கு
ஒரு கவிதை
மழை நீரில் விளையாடும் மழலைக்கு
ஒரு கவிதை
என்னை அறிமுகம் செய்த அப்பா அம்மாவிற்கு
ஒரு கவிதை
இத்தனையும் கொடுத்த பரம்பொருளுக்கு
ஒரு கவிதை
பார்த்து ரசிக்கும் பலவற்றுக்கு
ஒரு கவிதை
தினமும் இப்படித்தான்
எழுத எத்தணித்து அமர்கின்றேன்
காகிதத்தில் நீ...
அத்தனையும் மறந்தபடி
ஆரம்பிக்கின்றேன் மறுபடியும்
உனக்கான கவிதையை!!
6 comments:
//இத்தனையும் கொடுத்த பரம்பொருளுக்கு
ஒரு கவிதை
பார்த்து ரசிக்கும் பலவற்றுக்கு
ஒரு கவிதை
தினமும் இப்படித்தான்
எழுத எத்தணித்து அமர்கின்றேன்
காகிதத்தில் நீ...
அத்தனையும் மறந்தபடி
ஆரம்பிக்கின்றேன் மறுபடியும்
உனக்கான கவிதையை!!//
அழகான வரிகள்....
நன்றி சங்கவி...:-) தொடர்ந்து கவியுடன் இணைந்திருங்கள்.....
how are u teacher?!
:-)
நலம் ஷர்பு! புன்னகையைத் தவிர வேறேதுவும் சொல்லத் தோன்றவில்லையா?
யார் சொன்னது, வேற ஏதும் தோன்றவில்லை என்று...
உங்களின் எல்லா கவிதைகளின் பின்னும் ஒரு மென்சோகம் இருப்பதையும்., இன்னும் அது போன்ற சில...பல....இருப்பதுகளையும் ( பொதுவான ஒற்றுமைகளை) அறியமுடிகிறது! அதனை குறித்து பொதுவெளியில் பேச சிறிய தயக்கம் உண்டு!
ஷர்பு! இப்ப நான்.... :-)
Post a Comment