சாம்பல் நிற இரவு
சோம்பலாய் கண்மூடி
கிடந்தாலும் மனம்
தாயின் அரவணைப்பைத்தேடும்
குழந்தையாய்....
என் ஞாபகக் கல்லறையில்
உன் வண்ண நினைவுகள்
கண்துயில மறுக்கின்றன!
உறக்கமில்லா இரவில்
என் கண்கள் அழுவதை
என்னால் கூட
அறியமுடியவில்லை!
ஆனாலும் ஏனோ கண்ணீர்
கசிந்தபடி....
காதலின் விரல் நகங்கள்
குத்திக் கிழிக்கின்றன
என் இதயத்தில்...
அன்பு காட்டியது குற்றமா?
அன்பு கேட்டது குற்றமா?
இன்னும் புரியவில்லை...
தொலை தூர சுகத்தை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாற்ற ஏக்கங்களே
மிச்சமாகின்றன!
உள்ளிருக்கும் கவலையுடன்
உன் கவலையும் இப்போது
ஒட்டிக்கொண்டது!
ஒவ்வொரு கணமும்
இறந்த காலம்
நினைத்து நினைத்தே
நிகழ்காலம்
நிஜமிழந்து நிற்கின்றது
எதிர்காலம்
சூனியமாய் சுற்றுகின்றது!
என் மனத் தடாகத்தில்
தொடர்ந்து
உன்னைத்தவிர யாரும்
சங்கமிக்க முடியாது!
உன்னைப் போன்றதொரு
பாதுகாப்பான
சரணாலயம் வேறென்ன
இருக்கிறது எனக்கு?
மேகத்தில் மறைந்திருக்கும்
மழைநீரைப் போல்
எனக்குள்
நிறைந்திருக்கும்
உன்னை
இறக்கிவிடத் துணியவில்லை..!
காலங்கள் இறந்தாலும்
என் காதல்
ஒருபோதும் இறப்பதில்லையடா...!
5 comments:
எதிர்பார்த்து எதிர்பார்த்து
"எமாற்ற" ஏக்கங்களே...
"ஏமாற்ற" திருத்தவும் தோழி...
மேகத்தில்
மறந்திருக்கும்...?
or
மறைந்திருக்கும்...?
கவிதை அருமை..
கவிதைகள் எழுதும் அநேகம் பேர் கனவுகளின் சொந்தகாரர்கள் என்பார்கள்., அப்படியா?
@Sathish:பிழையை திருத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே....
@ஷர்புதீன்:அப்படித்தானு நினைக்கிறேன்..:-)
Post a Comment