சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....
Thursday, March 17, 2011
"மா" தவம்
மாதராய்ப் பிறந்திட "மா" தவம்
செய்ததும் உண்மையே...
பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் நானே..
பாசத்தில் என் தாய்வழி வந்த
அடிமைப்பெண்ணும் நானே...
வீட்டில் காணும் சிறுபூச்சிக்கும்
பயப்படுவேன்...
நாட்டில் காணும் விஷப்பூச்சியுடனும்
போரிடுவேன்!!
அந்த மூன்று நாட்களில்
முட்டிபோட்டு அழுதாலும் - எங்களவர்
பெண்மையை சீண்டும்பொழுது
சிலிர்த்தெழுந்து சிப்பாயாய்
வெட்டிப்போட்டு விரைந்திடுவேன்!
வறுமைவந்து வாட்டினாலும்
என் கருப்பையைக் கூட விலைபேசுவேன்!
ஒருவருக்குப் புண்ணியமாய்..! - ஆனால்
ஒருபோதும் என் கற்பை விலைபேசமாட்டேன்...
இலக்கியத்தில் நுகர்பொருளாய்
வலம் வந்த போதும்
நடைமுறை வாழ்க்கையில் மறைமகளாகவே
வலம் வருவோம்...
மாதராய்ப் பிறந்திட "மா" தவம்
செய்ததும் உண்மையே...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
intha kavithai thaan enakku romba pidithathu
மிக்க நன்றி நண்பரே...தோழமையுடன் இணைந்திருங்கள். (அப்ப மற்ற கவிதையெல்லாம் பிடிக்கலையா?)
Post a Comment