விண்மீன்கள் விட்டுச்சென்ற விடியல் விழிகளோ நெருப்புக் குளியலாய்... நெஞ்சமோ தணலாகி தவிப்பாய்...
உரையாடலால் உலா வரும் _ நம் குரல்கள் தென்றலாய் தேசமெங்கும் கதைப்பதற்கு அவசியமான செயல்கள் ஏதுமில்லை...ஆன போதும் கேட்பாரற்று சலனமின்றி கிடக்கும் எனது இனிய அலைபேசியும் வருத்தத்தில் முழுவதுமாய் உனக்கும் எனக்கும் இடையிலான
அறிதலும் புரிதலுமாய் நம்முள் காதல் உணர்வு பரிமாற்றங்கள் மென்மையாய் வரம்பு மீறா வார்த்தைகளுடன் _ உன் தெரிவிக்கமுடியாத ஏக்கத்தை நமக்குள் நடக்கும் ரகசிய யுத்தத்தில் சத்தமின்றி _ நீ _ இட்டுச் சென்ற முத்தமும் என்னுள் மொத்தமாய்....
2 comments:
கவிதைகள் எல்லாம் அருமையாகவும், இனிமையாகவும் உள்ளன . பாராட்டுக்கள்
ரசித்தமைக்கு நன்றி.
தோழமையுடன் இணைந்திருங்கள்..:-)
Post a Comment